Telegram Web Link
வாழ்க்கையைப் பற்றி யோசிப்பவன் காதலிப்பதில்லை..

காதலிப்பவன் வாழ்க்கையை பற்றி யோசிப்பதில்லை!

❤️
நெருங்கும் போது உணரவில்லை..

கடந்த பிறகு உருகிக்கொண்டு இருக்கிறேன்..

இழந்துவிட்டோமோ என்று!

💙💕💜
தென்றலின் தீண்டலில் தண்டுகளில்
தோரணம் போல் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும்
இலையின் தோரணையும்..

அழகு தான்!

🍃🍃🍃
பல சண்டைக்கு பின் சமாதானம்
இருவரின் கண்ணீர் துளிகளில் முடிகிறது..

அதீத காதலால்!

💖💑
உடன்
நடப்பதனால்
உறவல்ல..

ஒரு
சில்லு தேங்காயோ
சிறு
குவளை நீரோயன்றி
சங்கிலிகள் காலிறுக்க..

சித்திரவதையாற்
பணிய வைத்துக்
காட்டரசன்
கம்பீரங் குலைத்த
பகனென்று அறியாதவரை..

செல்லும் அதிகாரம்!

💔 🐘🦣🐘
எத்தனை காதலும் செய்திடுவேன்..

அத்தனை முறையும் நீ என் காதலியானால்!

❤️❤️
பெண்மையை நிலவோடு ஒப்பிடாதீர்கள்..

விண்ணில் உலாவரும் நிலவின் சுதந்திரம்..

மண்ணில் உலாவரும் நிலவுகளுக்கு கிடையாது!

❤️‍🩹❤️‍🩹
எத்தகைய காதல் மொழிகளைக் கேட்டாலும்..

ஒரு நொடியாவது நிழலாடித் தான் போகிறது..

மனதில் அரும்பிய முதல் காதலின் நினைவுகள்!

💙💕💜
சற்று தொலைந்து பார்..

காணாமல் போகும் பட்டியலில் பலர்!

😥😥😥
எண்ணங்களை திண்ணமாய் கொண்ட முயற்சியின் முடிவில் அறியலாம்..

வெற்றியின் ரகசியத்தை!

விடியல் வாழ்த்துக்கள்!

💐💐💐
பத்தாயிரம் பக்கம் கொண்ட
புத்தகத்தில்,
புள்ளிகள் எத்தனையோ?

அத்தனையானது..

ஒருநாளில்
உன் மீதான யோசனை!

😍😍😍

இனிய காலை!
வெள்ளை மயிலின் ஆட்டத்தில்..

கொள்ளை போனதவள்
கள்வன் உள்ளம்!

🧡💛🧡
விழிகளும் சுமைகளாக
மாறுகின்றன...

மனதிற்குப் பிடித்தவர்களைக்
காண முடியாத போது....
பெரும்பாலும் சிலருக்கு சொல்லப்படும் அறிவுரைகள்..

அதைக் கூறும் நபராலேயே கடைபிடிக்கப்படுவதில்லை..

ஊருக்கு மட்டுமே உபதேசம்!

😡😡😡
பிறரையும் கொஞ்சம் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்..

சொந்தக் காலில் யாரும் சுடுகாட்டிற்கு செல்ல முடியாது!

❤️‍🩹
சாவி தொலைக்கப்பட்ட பூட்டு
காதல் வேண்டுதலை நிறைவேற்றுமாம்..

மன இறுக்கம் தொலைந்தால் - மனங்கள் ஒன்று சேருமே!

❤️❤️❤️
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
மழையில் நனைந்து மழையை ரசிக்கும்
குட்டிக் குருவி..

பேரழகு..!!

😍😍😍
இன்னல்கள்
எத்தனையோ
இசைந்து ஏற்றனர்..

அன்னியன்
வெறிக்கு
சிந்திய
இரத்தங்கள்
மேதினில்..

எண்ணிலடங்கா
திண்ணியராக
வலம் வந்த
சுதந்திர வீரர்கள்..

மண்ணின்
விதைகளாக நாம்
திகழவேண்டும்!

💐💐💐

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்!

ஜனநாயகத்தில்
சுதந்திரம் தள்ளாடுது..

ஜனநாயகம்
ஆதிக்க சக்திகளின் கைகளில்..

ஏழைகள்
புறக்கணிக்கப்படுகிறார்கள்..

சாதி வேறுபாடுகளைக் களைவோம்
மதவாத சக்திகளை முறியடிப்போம்..

போராடிப் பெற்ற
இந்திய
ஜனநாயகம் பாதுகாப்போம்!

🧡🧡🤍🤍💚💚

75 வது சுதந்திர தினம் வாழ்த்துகள்!
நீ
சுவாசிக்க நேசிக்க வசிக்க
உனக்கென ஓர் நாடு..

விடுதலையாய் கொண்டாடு!

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

🇮🇳🇮🇳🇮🇳
2024/06/29 22:42:26
Back to Top
HTML Embed Code: